காரைக்குடி உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு: விதிமீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

காரைக்குடி: தினகரன் செய்தி எதிரொலியாக உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி அபராதம் விதித்தனர்.காரைக்குடி பகுதியில் உள்ள சாலையோர உணவகங்களில் உணவின் தரம் ஆய்வு செய்யப்படுமா என தினகரனில் கடந்த 27ம் தேதி செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து உணவுபாதுகாப்பு அதிகாரி முத்துக்குமார், உதவியாளர் கருப்பையா ஆகியோர் வாட்டர்டேங்க், புதிய பஸ்ஸ்டாண்டு, கல்லூரிசாலை, சண்முகராஜாசாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர பிரியாணி கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்து ரூ.2000 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து உணவுபாதுகாப்பு அதிகாரி முத்துக்குமார் கூறுகையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் பிரபாவின் அறிவுரையின்படி உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட நிலையில் அதில் உணவு பொருட்களை பேக் செய்து கொடுக்க கூடாது. அதற்கு பதில் சில்வர் பேக் கவர்களை தான் பயன்படுத்த வேண்டும். மசாலாவில் அதிக கலருக்காகவும் கலர் பொடி, ருசிக்காக அஜினோமோட்டோ சேர்ப்பது கூடாது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை எனில் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து செயல்பட்டால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து சாப்பிட உகந்தது அல்ல என முடிவு வந்தால் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: