தமிழகம் மாளிகையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

ஊட்டி: ஊட்டி தமிழகம் மாளிகை பகுதியில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு மற்றும் பன்றிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி வனங்களை விட்டு வெளியேறிய குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால், அடிக்கடி மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, யானை தாக்கி பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வந்து, கால்நடைகளை வேட்டையாடி சென்று விடுகின்றன. இதனால், பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டி தமிழகம் மாளிகை பகுதியில் ஒரு சிறுத்தை தினமும் வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தமிழகம் மாளிகை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறுத்தையால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன் அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: