வெம்பக்கோட்டை அகழாய்வில் சுண்ணாம்பு நிரம்பிய பானை கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் முன்னோர்கள் வணிகத்திற்கு பயன்படுத்திய சுண்ணாம்பு நிரம்பிய பெரிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே  வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 16 முதல் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் இதுவரை பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள்கள், வட்டச்சில்லுகள்,  அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள்,  விலையுயர்ந்த சூதுபவளம்,  சதுரங்கம் விளையாட பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன ஆட்டக்காய்,  நெசவுத் தொழிலில் இழைகளை பின்னுவதற்கு பயன்படும் சுடுமண்ணால் ஆன தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், குழந்தைகள் விளையாட்டு குவளை, விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், 8வதாக தோண்டப்பட்ட  குழியில் ஒரே இடத்தில் அருகருகே சுண்ணாம்பு நிரம்பியிருந்த பெரிய பானை,  இதற்கு உதவியாக சிறிய பானைகள் கிடைத்துள்ளது. இது முன்னோர்கள் பெரும் வணிகத்தில் ஈடுபட்டதற்கான அடையாளமாக திகழ்கிறது. இதுகுறித்து வெம்பக்கோட்டை அகழாய்வு பணி இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘ஆழம் ேதாண்ட, தோண்ட  தினமும் பல வகையான பழமையான பொருட்கள் அதிகளவில் தென்படுகின்றன.  8வது குழியில் சுண்ணாம்பு நிரம்பியுள்ள பெரிய பானை கிடைத்துள்ளது. இதன் அருகிலேயே சிறிய பானைகளும் உள்ளது. முன்னோர்கள்  சுண்ணாம்பினை வைத்து வணிகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது’’ என்றார்.

Related Stories: