50 ஆண்டுக்கு மேல் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம்?.: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் விளக்கம்

ராணிப்பேட்டை: 50 ஆண்டுக்கு மேல் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம்? என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ராணிப்பேட்டையில் சுற்றுபணயம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதனையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

நரிக்குறவர் வீட்டுக்கு சென்று விளம்பரம் தேடிக்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டியிருந்தன. 50 ஆண்டுக்கு மேல் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம்? என்று அவர் விளக்கம் அளித்தார். நரிக்குறவர் இன மக்களுக்கு திமுக அரசு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. மேலும் இன்று நலத்திட்ட உதவிகள் பெரும் 71,000 பேரில் 5,760 பேர் இருளர் இன மக்கள் ஆவர். விளிம்பு நிலை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். காலணி உற்பத்தி பூங்கா மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 128 டன் நெகிழி கழிவுகளை சேகரித்த சுவிட்சர்லாந்தின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,000 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 6 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். 6 திருக்கோயில்கள் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன; 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.361 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தகவல் தெரிவித்தார்.

அதனையடுத்து பேசிய அவர், ரூ. 118 கோடியில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டமான ராணிப்பேட்டை ஒரு காலத்தில் ராணுவப்பேட்டையாக இருந்தது. 71,103 பயனாளிகளுக்கு ரூ. 260 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தோல் பொருள் ஏற்றுமதியில் உலக கவனத்தை ஈர்க்கும் மாவட்டம் ராணிப்பேட்டை என கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது என அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும் விளம்பரத்திற்காக எந்த திட்டங்களையும் திமுக அரசு செய்யவில்லை. அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசு என கூறிய அவர், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளோம் என்று பட்டியலிட்டு காட்டி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Related Stories: