சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 2 தொழிலாளர்களையும் மீட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: