×

தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் பணிக்காக தற்போது நிரப்பப்படும் காலி பணியிடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை பாஜ சார்பில் வலியுறுத்துகிறேன். கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களில் முதல் முறையும், இரண்டாம் முறையும் தேர்வு எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

 இவர்கள் காத்திருக்கும் போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப் போவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு தகுதி வாய்ந்த தேர்வு எழுதி தகுதி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களை கொண்டு முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நிரப்ப  கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Annamalai , Teacher should fill the vacancies with those who have written the qualifying examination and are waiting: Annamalai request
× RELATED ஆன்மிக பாதையில் என் வாழ்க்கையை நடத்துகிறேன்: பாஜ தலைவர் அண்ணாமலை பேச்சு