×

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை திரைப்படமாகிறது

சென்னை: பாஜ முன்னாள் தலைவரும், 3 முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாகிறது. ‘அடல்’ என்ற பெயரில் உருவாகும் இதை வினோத் பானுஷாலி, சந்தீப் சிங் தயாரிக்கின்றனர். ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிட்டீஷியன் அன்ட் பேரடாக்ஸ்’ என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் வாஜ்பாயின் இளமைக்காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து இடம்பெறுகிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் யுத்தம், அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இப்படத்தில் இடம்பெறுகிறது. வரும் 2023 கிறிஸ்துமஸ் தினத்தன்று வாஜ்பாயின் 99வது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் படத்தை வெளியிடும் வகையில் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதில் வாஜ்பாயின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை இடம்பெறும் என்றும் தயாரிப்பாளர் வினோத் பானுஷாலி கூறியுள்ளார்.Tags : Former ,Vajpayee , Former Prime Minister Vajpayee's life becomes a movie
× RELATED முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை