சிறுநீரக கோளாறு காரணமாக காமெடி நடிகருக்கு தீவிர சிகிச்சை

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி குழுவில் முக்கிய நடிகராக இருப்பவர், வெங்கல் ராவ். முதன்முதலில் ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவர், பிறகு அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த் உள்பட சில நடிகர்களுக்கு சண்டைக் காட்சிகளில் ‘டூப்’ ஆக நடித்தார். விஜயவாடா அருகிலுள்ள புனாதிபாடு கிராமத்தில் பிறந்த அவர், சண்டைக் காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற அவர், தொடர்ந்து சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாமல் அவதிப்பட்டார். இந்நிலையில், வடிவேலுவின் காமெடி குழுவில் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்து, பல ஹிட் காமெடிகளை தந்தார். தற்போது சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வந்த வெங்கல் ராவ், சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். இதையடுத்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: