×

சில்லி பாயிண்ட்

* சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 1,013 நாட்கள் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்து விராத் கோஹ்லி படைத்த சாதனையை, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் நேற்று முறியடித்துள்ளார்.
* கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடக்கும் எலோர்டா கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), அனந்தா சோப்படே (54 கிலோ) தகுதி பெற்றுள்ளனர்.
* தென் ஆப்ரிக்க அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் நடுவரிசை பேட்ஸ்மேன் தெம்பா பவுமா, இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
* இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின்போது, ஸ்டேடியங்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்ப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தான் ஜூனியர் லீக் தொடருக்கான (லாகூர் கடாபி ஸ்டேடியம், அக். 1-15) ஆலோசகர்களாக ஷாகித் அப்ரிடி, டேரன் சம்மி, ஜாவேத் மியான்தாத், சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளனர்.Tags : Roulette Point
× RELATED சில்லி பாய்ன்ட்...