×

கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி

காஞ்சிபுரம்: கல்லூரி கனவு என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவ, மாணவியர்க்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் பூந்தண்டலம் ஊராட்சி, தனியார் பொறியியல் கல்லூரியில் “கல்லூரி கனவு” என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி  துவக்கி வைத்தார்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021 - 2022ம் கல்வியாண்டில், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு, 12ம் வகுப்பு முடித்த பிறகு, ‘நான் முதல்வன்’ உயர்கல்வி பயில்வதற்கான ‘கல்லூரி கனவு’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி  பல்வேறு துறை சார்ந்த உயர்கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் விளக்கங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு நேற்று தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 2021 - 2022ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற சுமார் 1,500 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தைச்சார்ந்த 8 துறை வல்லுநர்கள் மூலம் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்.கோ.சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடராஜன், பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags : An educational guide for Plus 2 students entitled ‘College Dream’
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...