மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பகுதியில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதில், 80 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை மாமல்லபுரத்தில் சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் ஊழியர்கள் நேற்று மதியம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கோவளம் சாலையில் 10க்கும் மேற்பட்ட கடைகளில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்து, 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இதில் தடை, செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 12,200 அபராதம் விதித்தனர். பறிமுதல், செய்யப்பட்ட பொருட்களை கோவளம் சாலைக்கு அருகே உள்ள வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று இயந்திரம் மூலம் தூள், தூளாக்கி சாலை போடும் பணிக்கு பயன்படுத்தப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: