×

காஞ்சிபுரத்தில் ரூ1.5 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வீடு: நீதிமன்ற உத்தரவால் இடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ 1.5 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை, நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்கோயில் அருகே வசித்து வருபவர் அருள்ஜோதி. இவர், காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுகாரர் குப்புசாமி. இவரது இடத்தில் அருள்ஜோதி மூன்று அடி தூரம் தள்ளி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், அருள்ஜோதிக்கும் குப்புசாமிக்கும் மோதல் 2010ம் ஆண்டு உருவானது. இதன் தொடர்ச்சியாக அருள்ஜோதி வீடு கட்டுவதை நிறுத்த பக்கத்து வீட்டுகாரர் குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு வழக்கு தொடுத்துள்ளார். தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் அருகே 300 மீட்டருக்குள் வீடு கட்ட வேண்டும் என்றால் தொல்லியல்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வீடு கட்ட வேண்டும். அருள்ஜோதியின் வீடு அருகே தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது.

ஆனால், அருள்ஜோதி காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் வீடு கட்டுவதாக வழக்கு அனுமதி பெறாமல் 2 மாடி கட்டிடம் கட்டிய கட்டிடத்தை இடிக்க இந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டிடத்தை இடிக்க உத்திரவிட்டது. இரு தரப்பினருக்கும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, அதன் உரிமையாளர் இடித்து விடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்டிடத்தை இடிக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், மின்சாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை என 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் 2 மாடி கட்டிடத்தை இடித்து வருகின்றனர். ரூ1.5 கோடி மதிப்பில்       2 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்தில் இடித்து வருவதால் அருள்ஜோதி குடும்பத்தினர் கதறி அழுத வரும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kanchipuram , 1.5 crore house completed in Kanchipuram: Demolition by court order
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...