×

வண்டலூர் அருகே புள்ளிமான் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி காப்புக்காட்டை ஒட்டிய பகுதியில்  மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான். வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, ஐய்யஞ்சேரி 5வது வார்டு, ரிஷப் நகரில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியை ஒட்டியப்படி காரணைப்புதுச்சேரி காப்பு காடு எல்லை பகுதி உள்ளது. இங்கு,  மர்மமான முறையில் புள்ளிமான் ஒன்று நேற்று காலை இறந்து கிடந்தது. இதனை கண்டதும், அப்பகுதி மக்கள் தாம்பரத்தில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு,  வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர்,  உயிரிழந்த புள்ளி மானை மீட்டு ஓட்டேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர்,  தாம்பரம் வனத்துறையினர் புள்ளிமான்  நாய் அல்லது பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pointman ,Vandalur , Point deer death near Vandalur
× RELATED வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்...