மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால்,  பொதுமக்கள் பெரும் சிரமத்துக் குள்ளாகியிருந்தனர். இந்நிலையில்,  அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

 இந்நிலையில், நேற்று மாலை திடீரென மேகம் சூழ்ந்து மதுராந்தகம், கருங்குழி, மேலவலம்பேட்டை, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை கெட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம்  ஓடியது. மேலும், காலையில் வெயில் அடித்ததால், மாலையில் எதிர்ப்பாராதமாக மேகம் சூழந்து மழை பெய்ததால் குடையின்றி வெளியில் வந்தவர்கள் நனைந்து சென்றனர்.  மேலும், காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், வெயிலின் தாக்கம் தற்போது பெய்த மழையால் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: