அஹோபிலம் மடம் ஜீயர் மாமல்லபுரம் வருகை

மாமல்லபுரம்: ஆந்திரா அஹோபில மடத்தின், 46வது ஜீயர் மாமல்லபுரம் வருகை தந்து, கடலில் புனித நீராடி போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அஹோபிலம் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற அஹோபில மடம் இயங்கி வருகிறது. இந்த மடம் 108 திவ்ய தேசத்தில் 97வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இந்த மடத்தின், 46வது ஜீயர் வருடத்தில் 2 முறை மாமல்லபுரம் வந்து கடலில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஹோபில மடத்தின் 46வது ஜீயர் அழகிய சிங்கர் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருகை தந்தார். பின்னர், கடலில் இறங்கி புனித நீராடினார். அதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு ெசன்றார்.

Related Stories: