அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது: பெங்களூர் புகழேந்தி கடிதம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவுவதால் அதிமுக கூட்டம் நடத்த அனுமதிக்க  கூடாது என்று பெங்களூர் புகழேந்தி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசுக்கு பெங்களூர் புகழேந்தி நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: அரசியல் கட்சி (அதிமுக) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வானகரத்தில் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கடந்த 22ம் தேதி முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி இருந்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் போன்ற பலருக்கு கொரோனா பரவியுள்ளது.  ஆகவே தமிழகத்தில் எங்கும் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக்கூடாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: