உள்ளகரத்தில் மெட்ரோ பணிக்காக தோண்டிய பாதாள சாக்கடையில் மண் சரிந்து தொழிலாளி பலி

சென்னை: பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது, உள்ளகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்ளகரம் மேடவாக்கம் சாலையில், மெட்ரோ ரயில் பணிக்காக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்ட சேலம் வெள்ளபாடி கிராமம், வாழப்பாடி தாலுகாவை சேர்ந்த ரவி (45) பாதாள சாக்கடை மேன்கோலை ஒட்டியுள்ள பள்ளத்தில் விழுந்ததும் மண் சரிந்து பூமிக்குள் புதைத்து விட்டார்.

சக ஊழியர்கள், புதை குழிக்குள் கிடந்தவரை மீட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மடிப்பாக்கம் போலீசார் ரவியின் சட்டத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் கோவிந்தராஜை கைது செய்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடின்றி பணி மேற்கொண்டது  குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள், பலியான ரவிக்கு செல்லக்கொடி, சுகன்யா என 2 மனைவிகள். நேற்று முன்தினம் தான் ரவி, சேலத்திருந்து பணிக்கு வந்துள்ளார்.

Related Stories: