அடையாறு ஆற்றில் மிதந்த ஆண் சடலம்: கொலையா என விசாரணை

சென்னை: சென்னை அடையாறு ஆற்றில் நேற்று முன்தினம் ஆணின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் அடையார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருவான்மியூரை சேர்ந்த பிரகாஷ்(46) என தெரியவந்தது. இவர் நீண்ட நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், 6 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அதேநேரம் அடையாறு ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டதால் அவரை யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: