பூந்தமல்லி: திருநெல்வேலியை சேர்ந்தவர் தங்ககுமார் (எ) அரவிந்தன் (29), குடும்பத்துடன் அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). டிரைவர். இவரும் நண்பர்கள். இந்நிலையில், தங்ககுமார் வீட்டுக்கு கார்த்திக்ராஜா அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது தங்ககுமாரின் மனைவிக்கும் கார்த்திக்ராஜாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரையும் தங்ககுமார் கண்டித்துள்ளார். ஆனாலும் அதன்பிறகும் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மது போதையில் இருந்த கார்த்திக்ராஜா மீது கல்லை போட்டு தங்ககுமார் கொலை செய்துள்ளார்.