திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக: திருச்சி சிவா எம்.பி பேச்சு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு,  திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிபூண்டி தொகுதி திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நேற்றுமுன்தினம் மாலை கூட்டம் நடந்தது.  இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன்,  துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ்,  மோகன்பாபு,  ஆனந்தகுமார்,  முரளிதரன்,  ஆர்.தில்லைகுமார் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,  டி.கே.சந்திரசேகர்,  ஆ.சத்தியவேலு , ரவி,  மணிபாலன்,  அப்துல் ரஷீத்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி,  நாஞ்சில் சம்பத்,  மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் திருச்சி சிவா பேசுகையில்,  திமுக இளைஞரணியில் சேர்ந்தால் எம்பி,  எம்எல்ஏ, அமைச்சர் ஆகலாம். அதற்கு, முன்னதாக சில வசதிகளை மறக்க தயாராக வேண்டும்,  திமுக அறிவித்த போராட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும், அதில் சிறைக்கும் சென்றிருக்க வேண்டும்.  கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக தான்.   இந்த பயிற்சி பாசறையில் முதலில் திமுகவின் வரலாறு பற்றியும் அதன் 5 கொள்கைகளை பற்றியும்  தெரிந்திருக்க வேண்டும், அதை குறித்து கொள்ளத்தான் உங்கள் கையில் நோட்டு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கின் வலது பக்கத்தில் பெரியார்,  அண்ணா, கலைஞர் படம் வைத்ததை போல் இடது புறத்தில் நீதி கட்சியை தொடங்கிய தலைவர்கள் படத்தையும் வைக்க வேண்டும்.  ஏதோ கூட்டத்திற்கு வந்தோம், சென்றோம் என்று இருக்கக்கூடாது.  கூட்டம் முடிந்தவுடன் இளைஞர்கள் புத்துணர்ச்சியாக செல்ல வேண்டும் என பேசினார். இக்கூட்டத்தில்,  மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், ஏ.வி.ராமமூர்த்தி,   தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார்,  கன்னிகை ஸ்டாலின்,  வக்கில்கள் சீனிவாசன், முனுசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: