விதிமீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல்

ஆலந்தூர்: பெருங்குடி 14வது மண்டலம் 187வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விதிமீறி கட்டுவதாக மண்டல உதவி கமிஷனர் சீனிவாசனுக்கு புகார் வந்தன.

இந்நிலையில், அவரது உத்தரவின்பேரில் மண்டல செயற்பொறியாளர் முரளி, உதவி செயற்பொறியாளர் மோகனவடிவேலு ஆகியோர் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்தக் கட்டிடம் மாநகராட்சியின் சட்டவிதிமுறைகளை மீறியும், கட்டிட வரைபட அனுமதிப்படியும் கட்டப்படாததால் மேலும் பணி தொடராதபடி அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு சீல் வைத்தனர்.

Related Stories: