மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை: முகப்பேரில் அரசு பெண்கள் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் சிண்டல் செய்ததாக பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ராமசாமி(45). இவர் முகப்பேரில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. அப்போது, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களை பதிவு செய்து வைத்திருந்தனர்.

அதன்படி ஸ்ரீதரும் ராமசாமியும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்திருந்தார். இவர் வேதியல் பாடம் நடத்தி வந்தார். இதில், தான் வகுப்பு எடுத்த மாணவிகளின் செல்போன் எண்கள் அனைத்தையும், சேமித்து வைத்திருந்தார்.

இதற்கிடையில், செல்போனில் மாணவிகளுடன் பேசுவதுடன், அவர்களிடம் தவறான எண்ணத்துடன் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கியதும் ஸ்ரீதரின் அத்து மீறிய  சீண்டல்கள் மாணவிகளிடம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவும் வெளி வந்த நிலையில் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் ஆசிரியர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ மற்றும் கொலை மிரட்டல் இரண்டு  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று ஆசிரியர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ சமூக வலை தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: