மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் ஏழில் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் கொரியர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை துணி துவைப்பதற்காக, துணி துவைக்கும் இயந்திரத்தின் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த, பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேஷ் உடலை மீட்டனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: