மின்சார ரயிலில் இருந்து விழுந்து கல்லூரி மாணவன் பலி

ஆவடி: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், (45). கூலித்தொழிலாளி. இவரது மகன் ரிப்பேலா நரேஷ் (20). இவரும் இவரது சகோதரனும் ஆவடி அருகே ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்துவந்தனர். இந்நிலையில் மகன் நரேஷ் நேற்றுமுன்தினம் மதியம் 2:00 மணிக்கு கல்லூரி முடித்துவிட்டு அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆவடி-அண்ணனூர் ரயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.  படுகாயமடைந்த நரேஷ், 108 ஆம்புலன்ஸ் மூலம், உடன் இருந்த அவரது நண்பர்களும் அவரது அண்ணன் உமேஷ் (22) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நரேஷ் பரிதாபமாக  உயிரிழந்தார்.

Related Stories: