பைக் மீது லாரி மோதி மாணவன் பலி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் பிரேம்குமார் (16), வளர்புரத்தில் உள்ள பள்ளி ஒன்றியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தண்டலம் - பேரம்பாக்கம் சாலையில் மண்ணுரில் இருந்து வளர்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சந்திப்பில் கனரக லாரி சாலையைக் கடக்க திரும்பியபோது இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், கீழே விழுந்ததில் பைக் மீது லாரி ஏறியதில் பிரேம்குமாத் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பிரேம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின், முதல் கட்ட விசாரணையில் நண்பரை பார்க்க பைக்கில் சென்றபோது விபத்து நேரிட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: