தி.மு.க. 15 வது பொதுத் தேர்தல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பூண்டி மேற்கு, கடம்பத்தூர் கிழக்கு,  மேற்கு, திருவாலங்காடு கிழக்கு, மேற்கு, பள்ளிப்பட்டு வடக்கு, தெற்கு, திருத்தணி கிழக்கு, மேற்கு, ஆர்.கே.பேட்டை கிழக்கு, மேற்கு ஆகிய ஒன்றியங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனு விண்ணப்ப படிவங்களை உரிய கட்டணத்துடன் ஜீன்  30 ஆம் தேதி இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.எம்.எஸ் திருமணமண்டபத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையாளர்  துரை கி.சரவணனிடம்  திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: