கருமுட்டை விற்பனை விவகாரம் சிறுமி தற்கொலை முயற்சி நாடகம்: காப்பகத்தில் இருந்து பாட்டி அழைத்து செல்லாததால் விரக்தி

ஈரோடு: ஈரோட்டில் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்கொலைக்கு முயன்றதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் தற்கொலை முயற்சி நாடகமாடியது அம்பலமானது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் ஆகியோர் சேர்ந்து ஈரோடு மட்டுமன்றி சேலம், ஓசூர், திருச்சி, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாய், வளர்ப்பு தந்தை உட்பட 4 பேரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர். மருத்துவமனை களில் விசாரணை நடந்தது.  

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது ஈரோடு ஆர்என் புதூர் அருகே அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் கழிவறையை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களும், போலீசாரும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி காப்பகத்தில் இருக்க விரும்பாமல், அவரது பாட்டி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்ததும், சிறுமியின் பாட்டி அவரை அழைத்து செல்ல முன் வராததால் தற்கொலை முயற்சி நாடகமாடியது தெரியவந்தது.

Related Stories: