பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெறலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:  பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில்களுக்கு அதிகப்பட்ச கடனாக ரூ50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகப்பட்சமாக ரூ20 லட்சமும் மற்றும் வணிகம் தொடர்பான தொழில்களுக்கு அதிகப்பட்சமாக ரூ20 லட்சமும் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் பெறலாம். சேவை, வணிகம் தொழில் தொடர்பான திட்டத் தொகை ரூ5 லட்சத்திற்க்கு மேல் இருப்பின் அத்தகைய தொழில்களுக்கு கடனுதவி பெறுவோர்களின் கல்விதகுதி  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும், வயது வரம்பு 18 நிரம்பியவராக இருத்தல் வேண்டும். போக்குவரத்து  வாகனங்கள், பண்ணை பொருட்கள் மற்றும் பண்ணை தொடர்பான தொழில்கள், பால் உற்பத்தி பொருட்கள், கோழிவளர்ப்பு, மீன்வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, தேனீவளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு, கழுதை, மற்றும் குதிரை ஆகியவற்றிற்கு கடன் மானியம் வழங்கப்படுகிறது.

திருவள்ளுர், மாவட்ட தொழில் மையத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டிற்கு 285 நபர்களுக்கு மானிய தொகையாக ரூ825 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்புவோர் இணையதள முகவரி www.kviconline.gov.in/pmegpeportal இல் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற,பொது மேலாளரை மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களூர், தபால் நிலையம் அருகில், திருவள்ளூர் - 602003 என்ற முகவரியில் அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.  

Related Stories: