பாலியல் புகாரில் கைதான நர்சிங் கல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி: திருவில்லிபுத்தூர் கோர்ட் அதிரடி

திருவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதான கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ். விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவரான இவர், 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த ஜூன் 11ம் தேதி கைதானார்.

இதையடுத்து திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாஸ்வின் ஜான் கிரேஸை ஆஜர் செய்தனர். அவரை ஜூன் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வீடியோ கான்பிரன்சில் நடந்த வழக்கு விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் ஜூலை 8ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தாஸ்வின் ஜான் கிரேஸ்க்கு ஜாமீன் கேட்டு திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கோபிநாத், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: