தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய்: தொடரும் விபத்தால் மக்கள் அவதி

ஆவடி: கால்வாய் அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி எம்.ஜி.ஆர் சாலையில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி அலுவலகம் ரயிலில் பயணம் என ஏராளமானோர் சென்று வருவது வழக்கம். இந்த சாலையின் வழியாகச் சென்றால், தேவிநகர், சின்னம்மன்நகர், குமரன்நகர், பெரியார் நகர், பருத்திப்பட்டு, காமராஜர் நகர் பகுதி மக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்த பகுதியில் ஆவடி வீட்டு வசதி வாரியம் மற்றும் கௌரிபேட்டை உள்ளது.  குழந்தைகள் பெரும்பாலானோர் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். விலிஞ்சியம்பக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இந்த கால்வாய் மூலம் பருத்திப்பட்டு ஏரியை சென்றடையும். மழைநீர் கழிவுநீர் செல்ல, பொதுப்பணித்துறை கால்வாய் அமைத்துள்ளது.

விலிஞ்சியம்பக்கம் அதிலிருந்து, சென்னை திருப்பதி சாலை வழியாக பருத்திப்பட்டு ஏரிக்கு இக்கால்வாய் செல்கிறது.  சாலையை ஒட்டி செல்லும் இந்த கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால், அவ்வப்போது, வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். மேலும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்லும்போது, கால்வாயில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து காயமடைந்தனர். எனவே, இக்கால்வாயில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: