மாவட்ட செயலாளர்கள் உட்பட 99 % பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கூறியதாவது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள்,  நிர்வாகிகள், அனைவருமே  எடப்பாடி கே.பழனிச்சாமி தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருமே இதை தான் வலியுறுத்துகின்றனர்.   மேலும்,  தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பது எதார்த்தமான உண்மை. தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஈபிஎஸ் பக்கம்  தான் உள்ளனர்.  மேலும் வருகிற 11 ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையில் தலைவராக வருவது நிச்சயம் ஈபிஎஸ் தான். அதற்கு  மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.  

அதிமுகவை  எம்ஜிஆர் , அம்மாவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு அதிமுக தொண்டனும், ஒவ்வொரு நிர்வாகியும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என நினைக்க வேண்டுமே தவிர இந்த கட்சியை கெடுப்பதற்காக நீதிமன்றத்திற்கு செல்வதோ,  இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பதோ தவறான விஷயம் தான். அதிமுக தலைமயில் அதுவும் ஒற்றைத் தலமைையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 5 மாவட்ட செயலாளர்கள் முதல், கிளைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் வரை ஒட்டெடுப்பு நடத்தினாலும், 99 சதவிகதம் பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவாக தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், ஒன்றிய செயலாளர்கள் கே.சுதாகர், சக்திவேல், ராமஞ்சேரி எஸ்.மாதவன், டி.டி.சீனிவாசன், கோ.குமார், ஏ.ரவி, நகர செயலாளர் ஜி.கந்தசாமி, பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயவேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.இ.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: