பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, சென்சார் கருவி கட்டாயம்: உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோரை பள்ளி நிர்வாகமே, தங்களது சொந்த வாகனங்களில் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. பிறகு மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர். இதில் மாணவர்கள் மட்டுமே பயணிப்பதால் பள்ளி வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.

குறிப்பாக, மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும், அதிகம் சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவற்றின் தரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் பள்ளி வாகனங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிழ்ந்து வருகின்றன. அவற்றை தடுப்பது குறித்து அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்திலுள்ள பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு பள்ளி பேருந்திலும் சென்சார் பொருத்த வேண்டும். முன்பக்கம் ஒரு கேமரா பொருத்த வேண்டும். பின்பக்கமும் ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். அது பின்புறம் வாகனத்தை எடுக்கும் போது டிரைவர் பின்பக்கத்தை முழுமையாக பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும் பின்புறம் எச்சரிக்கை சமிக்ஞையை வழங்கும் வகையில் எச்சரிக்கை சென்சார் கருவியை பொருத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: