அமர்நாத் யாத்திரை முதல் குழு பயணம்: 4,890 பக்தர்கள் புறப்பட்டனர்

ஜம்மு: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. பாகல்காம் மற்றும் பால்டால் வழியாக யாத்திரை நடைபெறும். பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி ரக்‌ஷா பந்தனன்று யாத்திரை முடிவுக்கு வரும். முதல் கட்டமாக 4890 பக்தர்கள் யாத்திரையை தொடங்கி உள்ளனர். பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பக்தர்களின் வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இவர்களின் பயணம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5000 வீரர்கள் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: