×

கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு

மதுரை: கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கடத்த அதிமுக ஆட்சியின் பொது தடைசெய்யப்பட்ட கஞ்சா, மற்றும் குட்கா பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற குற்ற செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஒருவருட காலமாக திமுக ஆட்சி அமைந்த பிறகு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவற்றை முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில், இந்த வழக்குகளில் கைது செய்யப்படுவபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. மேலும், அவர்களின் சொத்துக்கள், வாகனங்கள், பறிமுதல் செய்யப்படுகிறது.


இந்நிலையில், இன்று உயநீதிமன்ற மதுரைக்கிளையில் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் தப்பியோடியுள்ளவர்களின் ஜாமீன், மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி இருந்தார்.

அப்போது நீதிபதிகள் இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, கஞ்சா விற்பனை செய்பவர்கள் எவ்வாறு தடை செய்யப்பட்டு வருகின்றனர் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்:
தமிழக அரசும், காவல்துறையும் குட்கா, கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவருகிறது. கஞ்சா வியாபாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், இது குறித்து நாங்களும் தெரிந்துள்ளோம். குறிப்பாக தென்மண்டல ஐஜி-யாக உள்ள அஸ்ரா  கார்க் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஏனென்றால் அவர்கள் தான் தமிழகத்தில் முதன் முறையாக கஞ்சா வியாபாரின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார். தென்மண்டல ஐஜி-யின் இந்த செயல் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.


Tags : Madurai Branch ,High Court , Cannabis sale, police, stern action, Madurai branch of the High Court,
× RELATED ஓ.பி.எஸ். மீதான புகாரில் காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு..!!