கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது தடை செய்யப்பட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக அரசு அமைந்த பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஒருவருட காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு அமைந்த பின்பு தடை செய்யப்பட குட்கா பொருள் விற்பனை செய்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையியில் இந்த வழக்கு தொடர்புடையவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வங்கிக் கணக்குகள், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தப்பியோடிய சிலர் முன் ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகியிருந்தார். அப்போது இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? விற்பனையை தடை செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய  அரசு தரப்பு வழக்கறிஞர்; குட்கா கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வியாபாரிகள் கண்காணிக்கப்பட்டு அவரது சொத்துக்கள் சீல் வைக்கப்படுகின்றன. அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது என்று பதிலளித்தார்.

பின்னர் பேசிய நீதிபதிகள்; நாங்களும் இதனை நன்றாக அறிந்தோம். தமிழக காவல்துறையும், தென் மண்டலா ஐஜியாக உள்ள அஸ்ரா கார்க் அவர்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஏனெனில் அவர் தான் முதல் முறையாக 5 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினார். கஞ்சா விற்பனை செய்ப்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசு, காவல்துறையும் குட்கா விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: