திருச்சி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தென்னக ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி பொன்மலை பனிமுனை முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருவது போல, ராணுவத்தையும் தனியார்மயமாக்கி வருவதாக குற்றசாட்டிய அவர்கள், இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்; இல்லையெனில் ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.