சுடுமண் கிண்ணங்கள், உருண்டை வடிவ பானை கீழடி அகழாய்வில் கிடைத்தன

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண் கிண்ணங்கள் மற்றும் உருண்டை வடிவ பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் நடந்து வருகின்றன. இதற்காக கீழடியில் 8 குழிகள், அகரம், கொந்தகையில் தலா 4 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில் நீள் வடிவ தாயக்கட்டை, பானைகள், உலைகலன்கள், பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் தற்போது புதிதாக தோண்டப்பட்ட குழியில் மேற்புறம் 10 செமீ உயரத்திற்கு கருப்பு நிறமும் கீழ்புறம் சிவப்பு நிறமும் கொண்ட சுடுமண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிண்ணம், புனல் போன்ற அமைப்பை கொண்டுள்ளது.

ஏற்கனவே கீழடியில் சாயப்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. ஆனால் சிவப்பு வண்ண சாய கிண்ணம் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில் தற்போது கருப்பு சிவப்பு வண்ண சுடுமண்ணால் செய்யப்பட்ட கிண்ணமும் கிடைத்துள்ளது. மேலும் ஒரு கிண்ணம் மற்றும் உருண்டை வடிவிலான பானையும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை வெளியே எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

Related Stories: