திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் மும்முரம்

காஞ்சிபுரம்: தமிழகத்தில்  திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. அந்தவகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், சாலவாக்கம், வாலாஜாபாத் வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, லத்தூர் வடக்கு, தெற்கு, திருக்கழுக்குன்றம் தெற்கு,  மதுராந்தகம் வடக்கு, தெற்கு, சித்தாமூர் கிழக்கு, மேற்கு, அச்சரப்பாக்கம் வடக்கு, தெற்கு, ஒன்றியங்களில் ஒன்றிய நிர்வாகிகள் பதவிக்கான  உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு பெறும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் பவள விழா மாளிகையில் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தேர்தல் ஆணையாளராக அறிவிக்கப்பட்டுள்ள  தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவனிடம், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் ஒன்றிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடும் திமுகவினர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களை வழங்கினர். உட்கட்சி தேர்தல் பணியில் தலைமை கழக பேச்சாளர் பொன்னேரி சிவா, மாவட்ட  பொருளாளர் கோகுலகண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, எழிலரசன், தசரதன்  ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில்,  காஞ்சிபுரம் எம்பி  ஜி.செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், பி.எம்.குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், பி.சேகர், எம்.எஸ்.சுகுமார், க.குமணன், எஸ்.பி.பூபாலன், படுநெல்லி பாபு, சோழனூர் ஏழுமலை, பெ.மணி மற்றும் கே.எஸ். ராமச்சந்திரன், சரவணன், ஜுலியஸ் சீசர், அன்பில் பொன்னா, பி.எஸ்.பாஸ்கர், கே.சகாதேவன், தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: