செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் கழுத்தறுத்து மூதாட்டி கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கழுத்தறுத்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே ஆத்தூர், சேந்தமங்கலம் காட்டுப் பகுதியில் உள்ள தைலமர தோப்பில் சுமார் 60 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், காரணைபுதுச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமி (60). இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதன்பிறகு இவர் காணாமல் போனதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா குடும்ப சொத்து தகராறில் கூலிப்படை வைத்து கொன்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: