மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படை விசாரணை..!

கோடநாடு: கோடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வரின் தோழியாக இருக்கக்கூடுய சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருகுட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்டோருடன் பல்வேறு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களையும், போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள தனிப்படை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டுநர் கண்ணனிடம் ரகசிய விசாரணை நடைபெற்ற நிலையில் 2ம் நாளாக இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜ் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதாவின் மற்றோரு கார் ஓட்டுநரான கண்ணனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருவதால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: