ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம்!!

சென்னை: ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஓபிஎஸ் புகார் அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில்,அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்படவில்லை.என்று தெரிவித்த பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவதாக சாடி உள்ளார்.

மேலும் அதிமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்டுவதற்கு உள்ள அதிகாரிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆனதற்கான சட்ட விதிகளை குறிப்பிட்டும் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்துஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்,என்று எடப்பாடி பழனிசாமி பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: