கூடுதல் வட்டி கேட்டு மூதாட்டியை தொந்தரவு செய்தவர் கைது

கரூர்: கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி சுசீலாவிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்த செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில் கூடுதல் வட்டி கேட்டு செல்வகுமார் மூதாட்டியை தொந்தரவு செய்துள்ளார். ஆபரேஷன் கந்துவட்டி வேட்டையில் செல்வகுமாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: