ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பணி யில் இருந்த போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், `கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று  வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திர துளையில் தவறி விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நெல்சன் இறந்துவிட்டார். உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: