இரண்டுபட்ட அதிமுக அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜ: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: இரண்டுபட்ட அதிமுக மூலம் பாஜ அரசியல் ஆதாயம் தேடுகிறது என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் நேற்று அளித்த பேட்டி: இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞரை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும். அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற குழப்பம் அதிமுகவில் நடைபெறுகிறது. நாட்டு நலன், மக்கள் நலன் பற்றி அதிமுகவினர் சிந்திக்கவில்லை. இரண்டுபட்ட அதிமுக மூலம் பாஜ அரசியம் ஆதாயம் தேடுகிறது. பாஜ முயற்சி வெற்றி பெறாது. மோசமான பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசை வீழ்த்தும் வாய்ப்பை தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றார். 

Related Stories: