கேரளாவில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் தினசரி நோயாளிகள்  எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால், தற்போது கேரளாவில் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: