பாலிவுட் நடிகைகளால் தமிழ் ஹீரோயின்களுக்கு நெருக்கடி; பிரியாமணி வேதனை

சென்னை: பாலிவுட் நடிகைகளால் தமிழ் ஹீரோயின்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதாக நடிகை பிரியாமணி வேதனையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் வெள்ளையாகவும், ஒல்லியாகவும்தான் ஹீரோயின் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இவை எதுவுமின்றி அவர்கள் வழியிலேயே ஆரோக்கியமாக இருந்தனர்.

ஆனால், பாலிவுட் நடிகைகள் தமிழ் சினிமாவிற்குள் வந்த பிறகு, வெள்ளையாக இருக்க வேண்டும்; உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மும்பையில் பொதுவாகவே நடிகைகள் என்றில்லாமல் எல்லோருக்குமே உடல்வாகும், நிறமும் இயற்கையாகவே அதுபோல் இருக்கும்.

தமிழகத்தில் அப்படி கிடையாது. அதை புரிந்துகொள்ளாமல், கடும் நெருக்கடிக்கு தமிழ் திரைப்பட ஹீரோயின்கள் தள்ளப்பட்டார்கள். ஆனால், இப்போது அந்த எண்ணம் மாறி வருவது மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது.

Related Stories: