×

சர்வதேச கிரிக்கெட்; மோர்கன் ஓய்வு

லண்டன்: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2015ல் அலெஸ்டர் குக் ஓய்வு பெற்ற பிறகு தலைமை பொறுப்பேற்ற மோர்கன் (35 வயது), 2016ல் நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பைனல் வரை இங்கிலாந்து அணியை முன்னேற வைத்ததுடன், 2019ல் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

தேசிய அணிக்காக 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 டி20 போட்டிகளிலும் கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 16 டெஸ்டில் விளையாடி 700 ரன் (அதிகம் 130), 248 ஒருநாள் போட்டியில் 7,701 ரன் (அதிகம் 148 ரன், சதம் 14, அரை சதம் 47) மற்றும் 115 டி20ல் 2,458 ரன் (அதிகம் 91,  அரை சதம் 14) விளாசி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மோர்கனுக்கு, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags : Morgan , International cricket; Morgan Retirement
× RELATED மோர்கன், மாலன் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி