ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக கானா பாடகர் மீது புகார்

சென்னை: கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கலா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசிக்கும் இவருக்கு, 2 வருடத்திற்கு முன் வியாசர்பாடியை சேர்ந்த கானா பாடகர் சபேஷ் சாலமன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருந்தபோது, அதை சபேஷ் சாலமன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அந்த வீடியோக்களை காண்பித்து பலமுறை கலாவை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: