சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ம் கல்வி ஆண்டிலிருந்து ரூ.200 தனிக்கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பட்சத்தில் அரசு பள்ளி மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக பயில மாணவர்கள் செலுத்தும் தனிக்கட்டணம் ரூ.200ஐ 2022-23ம் கல்வியாண்டில் இருந்து ரத்து செய்வதன் வாயிலாக ஒவ்வொரு கல்வியாண்டும் 3.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.