நடுரோட்டில் ஓடஓட விரட்டி தொழிலாளி வெட்டி கொலை: 4 பேருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு 5வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆதி சுரேஷ் (45). அண்ணாசாலையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஜோதி (40) என்ற மனைவியும், புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் நேற்று மாலை 7 மணியளவில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை 1வது தெரு வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர், இவரை வழிமறித்து வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பித்து சுரேஷ் ஓட்டம் பிடித்தார். ஆனால் விடாமல் விரட்டி சென்று அவரை சரமாரியாக வெட்டினர். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது சில வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: